தேடி வந்த தனுஷ் பட்டம்! : கையெடுத்து கும்பிட்டு மறுத்த சிவகார்த்திகேயன்

Get real time updates directly on you device, subscribe now.

Sivakarthikeyan

ஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பிடிக்க விஜய் – அஜித் ரசிகர்கள் இன்றுவரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு ரஜினி ரசிகர்களோ எங்கள் தலைவர் ஒருவர் தான் அதை மற்றவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இதனால் எதற்கு இந்த சண்டையில் மிங்கிள் ஆவானேன் என்று நினைக்கிற சில ஹீரோக்கள் சூப்பர் ஸ்டார் என்கிற ரஜினியின் பட்டத்தின் முன்னால் அல்லது பின்னால் எதையாவது வார்த்தையை மாற்றி போட்டுக் கொண்டு அவரது சிஷ்யர் நான் தான் என்று கிளம்ப ஆசை வந்து விடுகிறது.

”மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தில் டைட்டில் கார்டில் லாரன்ஸுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்கிற பட்டத்தை கொடுத்தார் அப்படத்தின் இயக்குநர் சாய் ரமணி. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தைக் கிளப்பவும் பயந்து போன லாரன்ஸ் அது நான் இல்லீங்க… என்று பேக்கடித்து விட்டார்.

இப்படி சூடு போட்டுக் கொண்ட பூனை கண்ணுக்கு முன்னால் மிரண்டு போய் நிற்கிற போது அதே சூட்டுக்குழலை எடுத்து ஏன் வம்படியாக தன் மேல் வைத்துக் கொள்வானேன்.

Related Posts
1 of 69

அதனால் தான் தன்னைத் தேடி வந்த ஒரு பட்டத்தை கையெடுத்து கும்பிட்டு வேண்டவே வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகும் ”அதாகப்பட்டது மகாஜனங்களே” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் இந்த பரபரப்பு.

நிகழ்ச்சியில் சி்றப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த சிவகார்த்திகேயனை “உங்களுக்கு குழந்தைகள் வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதனால் இனிமேல் நீங்கள் ”இளைய சூப்பர் ஸ்டார்” என்றொரு பட்டத்தைக் கொடுத்து பேச அழைத்தார்.

அதைக் கேட்டதும் ஆடிப்போன சிவகார்த்திகேயன் மேடைக்கு வந்து மைக்கைப் பிடித்து “தயவு செஞ்சு எனக்கு இந்த மாதிரி பட்டங்கள் எல்லாம் வேண்டாம்” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன் “எனக்கு எந்தப் பட்டங்களும் வேண்டாம். அந்தப் பட்டப் பெயர்களை வாயால் சொல்லக் கூட விரும்பவில்லை. தயவு செய்து என்னை பட்டப்பெயர் சேர்த்து கூப்பிட வேண்டாம். என் வாழ்க்கை எப்படி இருந்தது, இந்த இடத்துக்கு எப்படி வந்தேன் என்பதைப் பற்றியெல்லாம் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். எனக்கென்று ஒரு பாதையை வைத்துக் கொண்டு அதில் போய்க் கொண்டிருக்கிறேன். எனக்கு அதுபோதும். என்றவர் சினிமாவில் 30 அல்லது 40 வயது வரை தான் மார்க்கெட் இருக்கும், வாய்ப்புகளும் வரும். ஆனால் தம்பி ராமையா அண்ணன் அந்த வயதையும் தாண்டி படங்களில் நடித்து வருவதற்கு அவருடைய விடா முயற்சியும், கடின உழைப்பும் தான் காரணம் என்றார்.

இத்தனைக்கும் சிவகார்த்திகேயனை தேடி வந்த இந்த ‘இளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம் புதிதல்ல. ஏற்கனவே ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷுக்கு ‘தொடரி’ பட ஆடியோ விழாவில் பார்த்திபன் உள்ளிட்ட சில திரை பிரபலங்கள் ஹாலிவுட் வரை தனுஷ் வளர்ந்து விட்டார் என்று வாயாரப் புகழ்ந்து அதே மேடையில் கொடுத்த பட்டம் தான் இது. அப்போது அந்த மேடையில் பேசிய தனுஷ் என் தகுதிக்கு மீறி என்னை புகழ வேண்டாம். இந்த மாதிரி பட்டங்களும் வேண்டாம் என்று மறுத்தார். தனுஷிடம் போன அந்தப்பட்டம் தான் இப்போது அவரது வளர்ப்பான சிவகார்த்திகேயனை தேடி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.