ஒன்றுமில்லாததை ஊதி பெருசாக்காதீங்க… : இளையராஜா அறிவுரை

கோவிலுக்கு செல்பவர்களையே சோதனை செய்து அனுப்புகிற காலமிது. அப்படிப்பட்ட சமூகத்தில் இசைஞானி இளையராஜா கொண்டு வந்த பிரசாத பையை பெங்களூர் விமான நிலையத்தில் சோதனை செய்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
என்றாலும் இசைக்கடவுள் என்று போற்றப்படும் அவரை சோதனை செய்தது அவரது ரசிகர்களுக்கு ரொம்பவே வருத்தம்.
இளையராஜாவை பெங்களூரு விமான நிலைய காவலர்கள் அவமதித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பை தெரிவித்தார்கள். அரசியல் கட்சித் தலைவர்களும் சும்மா இல்லை. வைகோ மற்றும் ராமதாஸ் ஆகியோரும் இந்த சோதனை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே சோதனை சம்பவம் ஊடகங்களில் பெரிதாக்கப்படுவதாக கருத்து தெரிவித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
ஊடகங்கள் தான் இந்த சம்பவத்தை ஊதி பெரிதாக்குகின்றன? நான் அந்த சோதனையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பாதுகாவலர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள், இவர்கள் போன்ற காவலர்கள் இல்லையென்றால் இந்தியாவே இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றுமே இல்லாத இது போன்ற விஷயங்களில் நமது மக்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் எனவும் அவர் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
பெரிய மனுஷன் சொன்னா கேளுங்கப்பா…