விஷாலுடன் திருமணமா..? : பல்டியடித்தார் வரலட்சுமி!

Get real time updates directly on you device, subscribe now.

varalakshmi

‘வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம் தான். 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம் நடக்கும். அதற்காக இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்து விட்டேன்.’ என்றெல்லாம் வதந்தியாக வந்த செய்திக்கு வலு சேர்த்தது திருமணம் குறித்து விஷால் கொடுத்த மனம் திறந்த பேட்டி.

இப்படி ஆமாம் வரலட்சுமியுடன் தான் திருமணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், வெளிப்படையாக அறிவித்து விட்டார் விஷால்.

அப்போ விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் திருமணம் உண்மைதானா? என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்க, பரபரப்பாக பேசப்பட்ட அந்த மேரேஜ் மேட்டருக்கு புல் ஸ்டாப் வைத்திருக்கிறார் வரலட்சுமி.

Related Posts
1 of 68

”இப்போதைக்கு நான் யாரையும் திருமணம் செய்வதாக இல்லை. நான் என்னுடைய வேலையை நடிப்பு மட்டுமே விரும்புகிறேன் ” என்று அந்தர் பல்டியடித்திருக்கிறார் வரலட்சுமி.

‘தாரை தப்பட்டை’ படத்துக்குப் பிறகு தமிழில் வாய்ப்பில்லாமல் மலையாளப் படங்களில் கமிட்டாகி பிஸியாக ஆரம்பித்திருக்கிறார் வரலட்சுமி. இந்த நேரத்தில் தனது
திருமணம் பற்றிய செய்தி வெளியானால் எங்கே கேரியர் பாதிக்கப்படுமோ என்று பயந்தே அவர் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்டை விட்டிருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்போ அது சரியாத்தான் இருக்கும்!