ஆண் குழந்தைக்கு அம்மாவானார் சிநேகா!
தமிழில் ‘புன்னகை அரசி’ என்றவுடன் ரசிகர்களின் ஞாபகத்துக்கு வருகிறவர் நடிகை சினேகா.
பிரசன்னாவை திருமணம் செய்த கையோடு நடிப்பையும் ஒரு கை பார்த்து விடத் துடித்தார்.
இடையில் தனது கணவர் பிரசன்னாவுக்காக தானே சொந்தமாக படத்தயாரிப்பில் கூட இறங்க திட்டமிட்டார்.
அந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே சிநேகா கர்ப்பம் என்கிற செய்தி பரவியது. ஏற்கனவே இரண்டு முறை இந்த கர்ப்ப வதந்தி பரவியதால் இதுவும் அதே வகையறா தான் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க இல்லை அது உண்மை தான் என்று உறுதிபடுத்தினார் பிரசன்னா.
சிநேகாவையும் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பார்க்கமுடியவில்லை. இந்த சூழலில் தான் நேற்று சிநேகாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொல்லியிருக்கிறார் பிரசன்னா.
ஆமாம், நேற்று இரவு சிநேகாவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. தேயும், சேயும் நலம் என்று கூறியிருக்கிறார் பிரசன்னா.