கார்த்திக் சுப்புராஜ் குறித்து மனம் திறக்கும் நடிகர்!

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 18

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறித்தும் ஜெகமே தந்திரம் அனுபவம் குறித்தும் பகிர்கிறார் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்,”நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மிகப்பெரிய விசிறி. “பீட்சா” படம் பார்த்து விட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை. மலையாளத்தில் பிரபலமாக தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத்தொடங்கின. இறுதியாக இப்படத்தின் எடிட்டர் டிமல் டென்னிஸ் மற்றும் விவேக் ஹர்ஷன் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களை சந்தித்தேன். இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்தார் கார்த்திக். படத்தில் மிகப்பெரிய பாத்திரம் என்பதால் என்னிடம் ஒரு காட்சியை விவரித்து, நடித்து காட்ட சொன்னார். எனக்கு தெரிந்த அரைகுறை தமிழில், நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். ஆனால் அவர் என்னை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்” என்றார்.