ஓவியாவுக்கு எதிரான 5 நொடி வீடியோ ஆதாரம் இதுதான்! : மீண்டும் அசிங்கப்பட்ட ஜூலி

”அட இந்தப்பொண்ணு நம்மளை விட பிரமாதமா நடிக்குதே…” என்று பத்து அவதாரம் போட்ட கமலே ஆச்சரியப்படுகிற அளவுக்கு ஓவியாவுக்கு எதிராக பொய் மூட்டைகளை பிக்பாஸ் வீட்டில் அவிழ்த்து விட்டார் ஜூலி.
முன்னதாக கமல் காட்டிய வீடியோவைப் பார்த்த அத்தனை பேரும் ஓவியா எந்தத் தவறும் செய்யவில்லை, அவர் யாரையும் பற்றி எதுவும் தவறாக கூறவில்லை என்பதை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகும் கூட ஜூலி எனக்கு அந்த 5 நோடி வீடியோவைக் காட்ட வேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்டு அனைவரையும் கடுப்பாக்கினார்.
கமல்ஹாசனே அப்படி ஒரு காட்சியை இங்கே இருக்கிற 30 கேமராக்களில் ஒரு கேமராவில் கூட பதிவாகவில்லை என்று சொன்னதோடு அது ஒரு மாயையாக இருக்கும் என்றும், மெண்டல்கள் தான் இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பபை செய்யும் என்றும் ஜூலியை கடிந்து கொண்டார்.
இதனால் நொந்து போன ஜூலி ”ஓவியா அப்படி சொன்னாக்கா, அந்த வீடியோவுல 5 நொடிக்கு முன்னால ஓவியா சொன்னாக்கா, அதை மட்டும் ஏன் போடல; எதுக்கு கட் பண்ணீனாங்க” என்று காயத்ரியிடம் சொல்லி ஓவென்று கதறி அழுதார் ஜீலி. அதோடு எனக்கு அந்த ”5 நொடி வீடியோவைப் போட்டுக் காட்டியே ஆகணும்” என்று தனது விடாப்பிடியை நேற்று வரையிலும் தொடர்ந்தார்.
இவ்வளவு நம்பிக்கையோடு ஜூலி சொல்கிறாரே? ஒருவேளை அந்த வீடியோவில் உண்மை இருக்குமோ? என்று நம்பும் ஆட்களும் இருப்பதால் அவர்களுக்கு உண்மை தெரியும் விதமாக ஜூலி கேட்ட அந்த 5 வினாடி என்ன? 15 வினாடி வீடியோவையே இன்று வெளியிட்டிருக்கிறது விஜய் டிவி.
ஓவியாவுக்கு எதிரான ஆதாரம் என்று ஜூலி சொன்ன அந்த அந்த 15 வினாடியில் கூட ஜூலிதான் பேசிக்கொண்டிருந்தாரே தவிர, ஓவியா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதன் மூலம் ஜூலி சொல்லியிருப்பது முழுக்க முழுக்க பொய் என்கிற உண்மை அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
வீடியோவை இங்கே பாருங்கள் :