என்னோட நிஜ வாழ்க்கையை மட்டும் ஃபாலோ பண்ணுங்க… : தனுஷ் எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

 

Dhanush

‘வேலையில்லா பட்டதாரி’யைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றிக்கு தயாராகி விட்டார் தனுஷ்.

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடிப் பேசவும்’ படங்களை இயக்கிய பாலாஜி மோகனுடன் அவர் இணைந்திருக்கும் ‘மாரி’ இன்றுமுதல் உலகமெங்கும் ரிலீசாகிறது.

அதையொட்டி ஹீரோயின் காஜல் அகர்வால் தவிர்த்த மாரி டீமுடன் நிருபர்களை சந்தித்தார்.

சந்திப்பில் பேசிய தனுஷ் ”பாலாஜிமோகன் சார் என்கிட்ட மூணு ஸ்க்ரிப்டை படிக்கக் கொடுத்தார். அதுல ஒண்ணு மட்டும் எனக்கு செட்டாகும்னு செலெக்ட் பண்ணிக் கொடுத்தேன். அதைப் பார்த்ததும் சார் இதுதான் உங்களுக்காகவே எழுதின ஸ்க்ரிப்ட்”ன்னு சொன்னார்.

டைரக்டர் பாலாஜிமோகன் டைரக்ட் பண்ணின முதல் ரெண்டு படங்களும் வேற டைப்ல இருக்கும். கொஞ்சம் அதிகமா யோசிச்சுப் பார்க்கணும். அதி புத்திசாலித்தனம் இருக்கணும்.

Related Posts
1 of 36

ஆனால் இந்தப்படம் அப்படியில்லை. அந்தமாதிரி படம் எடுத்தவரா இந்தப் படத்தை எடுத்திருக்கார்?ன்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க. அந்தளவுக்கு படம் ரொம்ப கமர்ஷியலா, செம லோக்கலா வந்திருக்கு. சில டைரக்டர்கள் சொன்ன கதையை அப்படியே எடுக்க மாட்டாங்க. ஆனால் பாலாஜி சார் சொன்னதை விட இன்னும் பெட்டரா கொடுத்திருக்கார்.

என்றவரிடம் கேள்விபதில் ஆரம்பித்ததும் ”ஒவ்வொரு படத்திலேயும் சிகரெட் பிடிக்கிற மாதிரி போஸ் கொடுக்குறீங்க.. உங்க மாமனார் ரஜினி கூட அதை விட்டுட்டார். நீங்க மட்டும் ஏன் அதை திரும்ப திரும்ப காட்டிக்கிட்டே இருக்கீங்க..?” என்றார் ஒரு நிருபர்.

”சார் நான் ஒரு டைரக்டர் என்ன சொல்றாரோ? என்கிட்ட தர்ற ஸ்க்ரிப்ட் புக்ல என்ன இருக்கோ? அதை அப்படியே செஞ்சிருவேன்.

அப்படித்தான் அந்த சிகரெட் பிடிக்கிற காட்சியும் படத்துல இருக்கு. கதைப்படி ஹீரோ லோக்கல் ஏரியாவோட டான். அவன் சிகரெட் பிடிக்கிற கேரக்டர். ஒரு டான்னா அதுகூட இல்லாமல் இருக்குமா? அதுக்காகத்தான் அந்த சீன்ல நடிக்கிறேன்.  அதை நீங்க ஒரு கேரக்டரா மட்டும் தான் பார்க்கணும். தனுஷ்ங்கிற தனிப்பட்ட ஆளா பார்க்கக்கூடாது.

படத்துல தான் அந்த மாதிரியான கேரக்டர்ல நடிக்கிறேனே தவிர, என்னோட நிஜ வாழ்க்கையில நான் சிகரெட், மதுவையெல்லாம் தொடுறதே இல்ல. என்னை ஃபாலோ பண்றதா இருந்தால் நிஜ வாழ்க்கையை மட்டும் பார்த்து ஃபாலோ பண்ணுங்க. படத்துல வர்ற கேரக்டர்களை ஃபாலோ பண்ண வேண்டாம் என்றார் தனுஷ் சீரியஸாக…

தனுஷ் ரசிகர்கள் எல்லாம் குறிச்சு வெச்சுக்கங்கப்பா…!