காதலும் இல்லை; கல்யாணமும் இல்லை – ஜெய்யை கை கழுவிய அஞ்சலி!
தாய்மொழியான தெலுங்கில் வாய்ப்பில்லாததால் தமிழ், மலையாளப் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அஞ்சலி.
மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களை வைத்திக்கும் அவர் நடிகர் ஜெய்யை காதலித்துக் கொண்டிருந்தார் என்பது தான் இதுநாள் வரை இந்த உலகம் நம்பிக் கொண்டிருந்தது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக சூர்யா தயாரித்த மகளிர் மட்டும் படத்தின் புரமோஷன் டைமில் ஒரு வீட்டில் அஞ்சலியுடன் சேர்ந்து தோசை சுட்டு அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியும் விட்டார்கள்.
இருவருடைய நடிப்பிலும் தயாராகியிருக்கும் ‘பலூன்’ திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. அதில் நிஜ காதல் ஜோடி இருவருமே அதிக நெருக்கம் காட்டி நடித்திருப்பதாக ஒரு ரொமான்ஸ் தகவலை ஊடகங்களில் கசிய விட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் சினிஷ்.
அந்தளவுக்கு நிஜக் காதலில் லயித்துக் கொண்டிருந்த ஜெய் – அஞ்சலி ஜோடியின் திருமணம் எப்போது நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு கடந்த ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.
முன்னதாக வருகிற 2018- ல் ஜெய் – அஞ்சலி திருமணம் நடக்கும் என்று உறுதியான தகவல் வெளிவந்த நிலையில் தற்போது திருமண விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார் அஞ்சலி. ஆமாம், ஜெய்யுடன் எனக்கு இருப்பது வெறும் நட்பு, அவரும் நானும் நல்ல நண்பர்கள். அதைத்தாண்டி எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து மேலும் பேசிய அஞ்சலி, ”ஜெய்யுடன் இணைந்து மீண்டும் பலூன் நடித்துள்ளேன். தேசிய விருது வாங்குவது தான் என்னுடைய கனவு. பலரும் என் கல்யாணம் எப்போது என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
2018 ஆண்டு முழுவதும் எனக்கு அடுத்தடுத்த படங்கள் இருக்கின்றன. தொடர்ந்து பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு என் கல்யாணம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்’’ அஞ்சலி.
இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்…