சொல் பேச்சு கேட்காததால் வந்த வினை – கணவரைப் பிரிகிறார் விஜய் டிவி தொகுப்பாளினி டி.டி!

Get real time updates directly on you device, subscribe now.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான காஃபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்ஷினி.

டிடி என்று விஜய் டிவி வட்டாரத்திலும், ரசிகர்களாலும் அழைக்கப்படும் இவருக்கும் அவரது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

ஸ்ரீகாந்த் டிடிக்கு நெருங்கிய நண்பர் என்றாலும் இது காதல் திருமணம் அல்ல, மாறாக டிடியின் பெற்றோரே மாப்பிள்ளையை தேர்வு செய்து நடத்தி வைத்த திருமணம்.

திருமணமாகி மூன்று ஆண்டுகள் வரை கணவருடன் எந்த சண்டை சச்சரவுகளும் இல்லாமல் குடும்பம் நடத்தியவர் தற்போது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

டிடியின் இந்த விவாகரத்துக்கு காரணமே அவர் தான் என்கிறார்கள் விஜய் டிவி வட்டாரத்தில்.

Related Posts
1 of 5

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த டிடியை தனது பவர் பாண்டி படத்தில் நடிக்க வைத்து பெரிய திரையில் நடிகையாக்கினார் நடிகர் தனுஷ்.

ஆனால் டிடியின் இந்த சினிமா பிரவேசம் அவரது கணவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லையாம். பலமுறை சொல்லிப் பார்த்தும் அவர்களது பேச்சை டிடி கேட்கவில்லையாம்.

உடனே டிடியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தனித்தனியாக வசித்து வந்திருக்கிறார்கள். அதுதான் இன்று விவாகரத்து அளவுக்கு போயிருக்கிறது. அதேபோல சில மாதங்களுக்கு முன்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சுசித்ராவின் ‘சுச்சி லீக்ஸ்’ லிஸ்டில் டிடியின் புகைப்படமும் இடம்பெற்றதும் இந்த விவாகரத்துக்கு இன்னொரு காரணம் என்கிறார்கள்.

விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் சில மாதங்களுக்கு முன்பு தான் ரம்யா தனது கணவரை விவாகரத்து செய்தார். அவரைத்தொடர்ந்து தற்போது திவ்யதர்ஷினியும் கணவரை விவாகரத்து செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.