‘காக்கா முட்டை’ சிறுவர்களை கௌரவப்படுத்திய ‘ஜிகினா’ டீம்!
சூரியனில் தோய்ந்த மெல்லிய தூரிகையும் தங்க சருகாய் மின்னும். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ரவி நந்தா பெரியசாமி இயக்கியுள்ள ‘ஜிகினா’.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ள ‘ஜிகினா’ திரைப்படத்தின் இசை சூரியன் எப்.எம்மில் வெளியிடப்பட்டது.
“இதுபோன்ற இசை விழா என்றாலே அதில் பெரும் நபர்கள் மற்றும் பெரிய நட்சத்திரங்கள் முன்னிலையில் ஆடியோ சிடியை வெளியிடுவது தான் வழக்கம்.
ஆனால் ஜிகினா படக்குழுவினர் ‘காக்கா முட்டை’ படத்தில் ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளைக் கொண்ட இரு சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் முன்னிலையில் ஆடியோவை வெளியிட்டார்கள்.
அப்போது பேசிய தயாரிப்பாளர் என்.லிங்குசாமி ”இன்றைய நிலையில் சிறிய படங்களே தமிழில் வெற்றி பெறுகிறது என்று கூறப்படும் நிதர்சனத்தின் நிஜ உருவாய் நிற்பவர்கள் இந்த காக்காமுட்டை சிறுவர்கள் தான். நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்கள் தான் மின்னும் பொன் போன்றது.
எங்களது நிறுவனத்திலிருந்து வெளிவந்து மக்களிடையே பெரிதாய் பேசப்பட்ட ‘வழக்கு எண் 18/9’, ‘கோலி சோடா’, ‘மஞ்சப்பை’, ‘சதுரங்க வேட்டை’ வரிசையில் ‘ஜிகினா’வும் பெயருக்கு ஏற்றாற்போல் மின்னும்’ என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.