விஜய் பிறந்தநாளில் ‘புலி’ பர்ஸ்ட் லுக் டீஸர்!
‘கத்தி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘புலி.’ சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்ஷிகா, ஸ்ருதிஹாசன் நடிக்க இவர்களுடன் சுதீப், ஸ்ரீதேவி உட்பட பலரும் நடித்து வருகிறார்கள்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் ஆரம்பித்து வேகமாக நடைபெற்று முடிந்த இப்படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே முடித்து விட்டார் இயக்குனர் சிம்புதேவன்.
இதையடுத்து படத்தின் ரிலீஸ் வேகமெடுத்திருக்கும் நிலையில் வருகிற ஜூன் 22 விஜய் பிறந்தநாளில் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட இருப்பதாக சிம்புதேவன் தெரிவித்திருக்கிறார்.
அவரின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.