ஜான்டோ- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

அர்ஜுன் தாஸ் குரலுக்கேற்ற ஒரு கதை. ஆனால் படம்?

தன் அப்பாவால் அடிக்கடி அவமரியாதைச் செய்யப்படும் நபர் ஹீரோ அர்ஜுன் தாஸ். போலீஸ்-ஆன அவர் ஒரு முக்கியமான மர்டரை விசாரிக்கிறார். அதேநேரம் ஹிருதய் என ஒரு சிறுவன் காணாமல் போகிறான். அதேபோல் 17 சிறுவர்கள் காணாமல் போகிறார்கள். அர்ஜுன் தாஸ் விசாரிக்கும் கேஸுக்கும் இந்த கடத்தல் கேஸுக்கும் என்ன லிங் என்பதை நோக்கி படம் பயணிக்கிறது

அர்ஜுன் தாஸ் இறுக்கமான கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளார். சஞ்சனா நடராஜன் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. ஜாரா வினீத் சந்தோக் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார். படவா கோபி ஹீரோவின் தந்தையாக வருகிறார். ஸ்ரிஷ்டி, அனுபமா குமார் ஆகிய நடிகர்களும் சரியான அட்டனென்ஸைப் போடுகிறார்கள்

இசையமைப்பாளர்கள் முஜீப் மஜீத், தி ஆர்டிஸ்ட் 404 இருவரும் இசையில் தங்களது ஸ்கோரை நிலை நிறுத்தியுள்ளனர். ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன் ஒரு திரில்லர் படத்திற்கேற்ற லைட்டிங்-ஐ செட் செய்து பக்காவான ஒளிப்பதிவைத் தந்துள்ளார்

இயக்குநர் மதுமிதா மிக வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்து கவனம் ஈர்த்துள்ளார். ஒவ்வொரு முடிச்சுகளை அவிழ்க்கும் விதம் கிரேட். ஆனால் படத்தின் முடிவை ஏகத்திற்கும் சொதப்பிவிட்டார். நிச்சயமாக பாமர ரசிகனுக்கு இந்த முடிவு கனெக்ட் ஆகாது

பேஸ்மட்டத்தை நன்றாக அமைத்துவிட்டு, பில்டிங்கில் சொதப்பிவிட்டார்கள். இருந்தாலும் ஒரு வித்தியாச முயற்சிக்காக ஒருமுறை படத்தைப் பார்க்கலாம்
3/5