மெட்ராஸ் மேட்னி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பாசமும் தியாகமும் நிறைந்த குடும்பப்படம் இந்த மெட்ராஸ் மேட்னி

படத்தின் துவக்கத்தில் சத்யராஜ் திரையில் தோன்றி கதை சொல்கிறார். அந்தக் கதையின் வழியே காளிவெங்கட்டின் வாழ்வு படமாக விரிகிறது. காளிவெங்கட்டிற்கு ஒரு மகள் பெங்களூரில் வேலை செய்கிறார். ஒரு மகன் 12Th முடித்துவிட்டு அடுத்த படிப்பிற்காக வெயிட் செய்கிறான். இவர்கள் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்காக காளி வெங்கட் போராடுவதும், அப்பாவின் அன்பை மகளும் மகனும் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதும் தான் படத்தின் கதை

கதையின் நாயகன் காளி வெங்கட் பிரமாதமாக நடித்துள்ளார். ஒரு நடுத்த வர்க்கத்தின் குடும்பத்தலைவனை கண்முன்னே நிறுத்தி ஆச்சர்யப்படுத்துகிறார். அவரது மகளாக நடித்துள்ள ரோஷினி ஹரிபிரியன் பின்னியெடுத்துள்ளார். 2K kid ஆக வரும் விஷ்வா தன் அம்மாவிற்காக மின்துறை அதிகாரியை நோக்கி எகிறும் காட்சியில் மிரட்டியுள்ளார். மனைவியாக வரும் ஷெல்லி படமெங்கும் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளார். மேலும் சாம்ஸ், பொற்கொடி, கீதா கைலாசம் உள்பட சிறுசிறு கேரக்டர்களில் வரும் எல்லோருமே நடிப்பில் சிறப்பு செய்துள்ளனர்

KC பாலசாரங்கன் இசையால் படத்திற்குள் நிறைய உணர்வுகளை கடத்தியுள்ளார். வெல்டன். ஆனந்த் GK -யின் கேமரா நடுத்தர வர்க்கத்தின் உலகத்தையும் அவர்களின் வாழ்விடங்களையும் துல்லியமாக காட்டியுள்ளது

இந்தப்படத்தின் கதையை சத்யராஜின் துணையின்றி நேரடியாகவேச் சொல்லியிருக்கலாமே. சில இடங்களில் கதை சொல்லியே கதைக்கு வில்லனாகத் தோன்றுகிறார். மேலும் முதல்பாதி இந்தக் கதை எதை நோக்கிப் போகிறது என்பதைவிட எது கதை என்ற குழப்பம் நமக்குள் ஏற்படுகிறது. இந்தக் குறைகளைத் தவிர்த்திருந்தால் நிச்சயமாக படம் நமக்குள் பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால் படம் பேசியிருக்கும் நிஜம் அத்தகைய வலிமையானது. ஒரு நடுத்தர வர்க்கம் மேன்மை பெற எவ்வளவு உழைப்பும் தியாகமும் வேண்டியதிருக்கிறது என்பதை இயக்குநர் கார்த்திக்கேயன் மணி அபாரமாக உணர்த்தியுள்ளார்

மேட்ராஸ் மேட்னி- குறைகள் மறந்து ரசிக்கலாம்
3/5