யோகிபாபுவின் காதலுக்கு டிப்ஸ் கொடுத்த ஜோதிகா!

Get real time updates directly on you device, subscribe now.

ஜோதிகா கதையின் நாயகியாக நடித்து வரும் ‘காற்றின் மொழி’ படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பெரிய நடிகர்களின் பெயர்களும் அந்தப் படத்த்தோடு சம்பந்தப்படுத்தி வரும் செய்திகள் தான் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். உதாரணமாக நடிகர் சிம்பு அப்படத்தில் நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வரும் யோகிபாபுவும் அப்படத்தில் நடிக்கிற செய்தி வெளியாகியிருக்கிறது.

ஆமாம் யோகிபாபு ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அவர் ஜோதிகாவுடன் நடித்த இரண்டு காட்சிகளுமே நகைச்சவை மிகுந்து இருக்கும். அரங்கத்தில் மிகப்பெரிய சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று படக்குழு தெரிவிக்கிறது.

Related Posts
1 of 17

ஆர்.ஜே வாக நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரவர்களின் காதலைப் பற்றி பேசுகின்றனர். அதில் ஒரு அழைப்பாளராக யோகிபாபுவும் பேச, ஜோதிகா அவருக்கு காதலில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று தீர்வு சொல்லும் விதமாக அந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

போப்டாவின் ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ்பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா மற்றும் சிந்து ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஏ.ஹெச். காஷிப் இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கலையை கதிர் கவனிக்கிறார். ராதா மோகன் இயக்கிய இப்படத்திற்கு பொன் பார்த்திபன் வசனங்களை எழுதியிருக்கிறார்.