நீங்க கவிஞரா? – அப்போ இந்த ‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி உங்களுக்குத்தான்!
‘மொழி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஜோதிகா அப்பட இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்திருக்கும் படம் தான் காற்றின் மொழி.
இப்படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கோ. தனஞ்ஜெயன், எஸ். விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
அக்டோபர் 18-ம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தின் படக்குழு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ‘காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி’யை அறிவித்துள்ளது.
அதன்படி பாடல் எழுத தெரிந்தவர்கள், சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காண்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறந்த பாடல்கள் இரண்டை எழுதுபவர்கள் மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்த போட்டியில் பங்குபெற கடைசி தேதி 22.09.18 ( சனிக்கிழமை ). போட்டியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளை படித்து விட்டு பாடல் எழுதும் போட்டியில் பங்கு பெறலாம்.