கேத்ரீன் தெரசாவுக்காக மலைத்தேன் எடுக்கப் போன ‘கடம்பன்’ ஆர்யா

Get real time updates directly on you device, subscribe now.

kadamban1

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, ஆர்யாவின் ஷோ பீப்பிள் பட நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும் படம் “ கடம்பன் “

ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – S.R.சதீஷ் குமார்

இசை – யுவன்சங்கர் ராஜா

எடிட்டிங் – தேவ்

கலை – A.R.மோகன்

ஸ்டன்ட் – திலீப்சுப்ராயன்

Related Posts
1 of 13

பாடல்கள் – யுகபாரதி

நடனம் – ராஜு சுந்தரம், ஷோபி

இணைத் தயாரிப்பு – B.சுரேஷ்B.ஜீவன், ஜித்தன்ரமேஷ் ஜீவா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராகவா

படம் பற்றி இயக்குனர் ராகவாவிடம் கேட்டோம் ….

மலை வாழ் மக்களின் வாழ்க்கை பதிவு தான் கடம்பன்..

ஆர்யா இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அடர்ந்த காடுகளில் பூச்சிகள் வண்டுகள் கடியிலிருந்து யாரும் தப்பவில்லை.
மலைத்தேன் எடுப்பவர்களின் வாழ்க்கை தான் இதன் மூலக்கரு. ஆர்யாவுக்கு இது ஹைலைட் படமாக இருக்கும்.

ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். பக்கா கமர்ஷியல் படம் தான் ‘கடம்பன்’ என்றார் இயக்குனர் ராகவா.