வைரமுத்து போட்ட பிச்சையில் வளர்ந்தவர் ஏன் வாய் திறக்கவில்லை? – ரஜினியை வெளுத்து வாங்கிய சீமான்

Get real time updates directly on you device, subscribe now.

ண்டாள் பற்றி வைரமுத்து பேசிய விவகாரம் சர்ச்சையாகி அது இன்னும் ஓய்ந்தபாடில்லை.

வரம்பு மீறி வார்த்தை போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ஏன் ரஜினி வாய் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான்.

Related Posts
1 of 15

”உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்”, ”ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா” போன்ற வைரமுத்து எழுதிய பாடல் வரிகளால் தான் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ரஜினி.

இவையெல்லாம் ரஜினிக்கு வைரமுத்து போட்ட பிச்சை, அந்தப் பிச்சையில் வளர்ந்த ரஜினி ஆண்டாள் விவகாரத்தில் வாய் திறக்காமல் மெளனமாக இருக்கிறார். மீறி வாய் திறந்தால் எங்கே ஒரு குறிப்பிட்ட சாதியினரின் ஓட்டு கிடைக்காமல் போய் விடுமென ரஜினி நினைக்கிறார். எப்போதும் தர்மத்தின் பின்னால் தான் இருக்க வேண்டும் என்றார் சீமான்.