விஜய் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு டபுள் ட்ரீட்!
இந்த ஆண்டு தீபாவளியை ‘பிகில்’ படத்துடன் கொண்டாட தயாராகி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் இந்தப்படம் மட்டும் தான் தீபாவளிக்கு வருமென்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பிகிலுடன் கார்த்தியின் ‘கைதி’ படமும் மோத தயாராகி விட்டது.
‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா.
‘மாநாகரம்’ போலவே முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் அக்டோபர் வெளியீடு என்று தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்டு வந்த நிலையில் ‘கைதி’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரேஸில் விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ படமும் இணைந்திருக்கிறது.
விஜய்யின் 64-வது படத்தின் இயக்குனரும் லோகேஷ் கனகராஜ் என்பதால் ‘கைதி’ படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முதல் ஷோ ‘பிகில்’, அடுத்த ஷோ ‘கைதி’ என்று தங்களுக்கு தீபாவளிக்கு டபுள் ட்ரீட் கிடைத்திருப்பதாக சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.