‘ஜோக்கர்’ நாயகியா இது? – மிரள வைத்த போட்டோஷூட்!

Get real time updates directly on you device, subscribe now.

ன்றிரெண்டு படங்களுக்குப் பிறகு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்றால் உடனே புதிதாக போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை மார்க்கெட்டில் விடுவார்கள் கதாநாயகிகள்.

அந்த லிஸ்ட்டில் ‘ஜோக்கர்’ பட நாயகி ரம்யா பாண்டியனும் சேர்ந்து விட்டாரோ? என்று ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஆச்சரியப்பட்டுக் கிடக்கிறது.

கடந்த சில தினங்களாக சேலை, புடவையில் மேக்கப் இல்லாமல் எடுக்கப்பட்ட தன்னுடைய கிளுகிளு கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார் ரம்யா பாண்டியன்.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்த கோடம்பாக்கத்தினர் பட வாய்ப்புக்காகத்தான் இப்படி ஒரு போட்டோஷூட் எடுத்து வெளியிட்டிருக்கிறார் என்று முணுமுணுக்க, அதெல்லாம் இல்லை இது நான் வழக்கமாக செய்வது தான் என்கிறார் ரம்யா பாண்டியன்.

Related Posts
1 of 134

குடும்பப் பாங்கான கேரக்டர்களில் என்னைப் பார்த்து பார்த்து நான் அதற்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவேன் என்று இயக்குனர்கள் நினைக்கிறார்கள். அதைத்தாண்டி எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிப்பேன் என்று காட்டுவதற்காகத்தான் இந்த புகைப்படங்களை எடுத்தேன்.

ஜீன்ஸ் போட்டு, சுடிதார் போட்டு என விதவிதமான ஆடைகளில் அவ்வப்போது போட்டோஷூட் எடுப்பேன். அப்படித்தான் இந்த முறை ஒரு மாறுதலுக்காக சேலை கட்டி புகைப்படங்களை எடுத்தேன்.

இது இந்தளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்போதும் என்னைத்தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. விரைவில் என்னுடைய புதுப்படம் குறித்தான தகவலை வெளியிடுவேன் என்கிறார் ரம்யா பாண்டியன்.