பிரம்மாண்டமான அரங்குகளில் படமாக்கப்பட்ட ஜாக்கி ஷெராப்பின் ‘பாண்டிமுனி’

Get real time updates directly on you device, subscribe now.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ’பாண்டிமுனி’ படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடைபெற்றது.

இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.

படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்..

”திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம் இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது.

Related Posts
1 of 136

அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம்.

அத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப் பட்டது. அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது.

கைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சுமார் 50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம்.

என் சினிமா பயணத்தில் ‘பாண்டிமுனி’ படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது” எனறார் கஸ்தூரிராஜா.