காஜல் அகர்வாலை கதற விடும் இயக்குநர்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

kajal1

நடிப்பதெல்லாம் பெரிய ஹீரோக்களின் படங்கள் தான் என்றாலும் செம மூட்-அவுட்டில் தான் இருக்கிறாராம் காஜல் அகர்வால்.

ஜில்லாவுக்குப் பிறகு மாரி, பாயும்புலி ஆகிய படங்கள் ரிலீசானது. அந்தப் படங்கள் ரிலீசான பிறகு தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டவர் படங்கள் பிளாப் என்கிற ரிசல்ட் வந்ததும் அப்செட்டாகி விட்டார்.

Related Posts
1 of 7

ஏற்கனவே காஜல் அகர்வால் அதிக சம்பளம் கேட்கிறார் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் மேற்கண்ட இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் தனது சம்பளத்தை வம்படியாக குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் காஜல்.

அதுகூட பரவாயில்லை, பெரிய ஹீரோக்கள் படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை இப்போது தான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஆகவே இனிமேல் புதுமுக நடிகர் படமென்றாலும் பரவாயில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டராக இருந்தால் கால்ஷூட் தர தயாராக இருக்கிறேன் என்கிறார்.