ஏன் ‘வேதாளம்’ ட்ரெய்லர் வரல..? : சரி விடுங்க அதுவும் நல்லதுக்குத் தான்

Get real time updates directly on you device, subscribe now.

ajith1

முன்பெல்லாம் ஒரு படத்துக்கு ட்ரெய்லர் ரிலீஸ் ஆவதே பெரிய விஷயமாக ரசிகர்களால் பார்க்கப்பட்டதில்லை.

இப்போதோ அப்படியில்லை. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

அதிலும் விஜய் – அஜித் படங்களின் புரமோஷன் என்றால் கேட்கவே வேண்டாம், ரசிகர்கள் தங்கள் ஹீரோவைத் தூக்கி வைக்கிறேன் பேர்வழி இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் ட்விட்டரையே ஸ்தம்பிக்க வைத்து மோதிக் கொள்வார்கள்.

Related Posts
1 of 32

அப்படித்தான் ‘புலி’ பட ரிலீசின் போது அஜித் ரசிகர்கள் அந்தப் படத்துக்கு எதிராக பல மீம்களை உருவாக்கி படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பை உண்டு பண்ணினார்கள்.

இதனால் கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் ‘வேதாளம்’ படத்தின் ரிலீசுக்காக காத்திருந்தார்கள். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தான் ‘வேதாளம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகும், அதை வைத்து படத்தின் ரிலீசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் நினைத்திருந்தார்களாம்,

இது ‘வேதாளம்’ டீமுக்கு தெரிந்ததோ என்னவோ எங்கே ட்ரெய்லரை கலாய்த்து டிவிட்டரில் மீம்கள் வெளியானால் அது அதற்கடுத்து சில தினங்களில் ரிலீசாகும் படத்தின் வசூலை பாதிக்குமோ? என்று நினைத்து நேக்காக ட்ரெய்லரே வெளியிடாமல் நேரடியாக படத்தை ரிலீஸ் செய்து விட்டார்கள்.

இது அஜித் ரசிகர்களுக்கு ஒருபக்கம் வருத்தத்தை தந்தாலும், விஜய் ரசிகர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்து ‘வேதாளம்’ படத்தின் வசூல் எகிறியிருப்பது அவர்களை உற்சாகத்தில் வைத்திருக்கிறது.