டிக்கெட் வாங்கினால் கைலி இலவசம் – தயாரிப்பாளரின் புது யுக்தி

Get real time updates directly on you device, subscribe now.

ராணா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்கள் சாமி ,திவாகர் ,அஞ்சு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘களவாணி சிறுக்கி’.

கிராமத்தில் படித்துவிட்டு வீட்டில் இருக்கும் கஸ்தூரியை ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தாய் மாமா மருதுவிற்கு திருமணம் செய்துவைக்க கஸ்தூரியின் அம்மா ஏற்பாடு செய்கிறார் இந்நிலையில் அதே ஊரில் கறிக்கடை நடத்தும் பாண்டி என்பவனும் கஸ்தூரிக்கு மாமன் என்பதால் கல்யாணத்தில் பிரச்சனை வருகிறது பாண்டியும் நான் தான் கஸ்தூரியை திருமணம் செய்வேன் என சவால்விட்டு செல்கிறான் .கஸ்தூரியிடம் டியூஷன் படிக்கும் கதிர் என்பவனுக்கு இவளை எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசை.

அதே நேரத்தில் அந்த ஊருக்கு வரும் டாக்டர் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு காதல் மலர பல பிரச்சனைகளுக்கு நடுவில் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு கல்யாணம் நடைபெறுகிறது .முதலிரவு நேரத்தில் அரவிந்த் இறந்து விட, அரவிந்தை கொன்றது மருதுவா ,கதிரா என்பதை விறுவிறுப்பாக சொல்லுகிறது இந்தப்படம்.

படம் வரும் அக்டோபர் மாதம் 5 ம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ரசிகர்கள் கூட்டம் இப்போது திரையரங்கில் குறைந்து கொண்டு வருவதை அறிந்த இப்பட தயாரிப்பாளர் புதுயுக்தி ஒன்றை கையாளப்போகிறார்.

Related Posts
1 of 134

அது என்னவென்றால் படம் வெளியாகும் 5,6,7 ஆகிய தேதிகளில் காலை காட்சிக்கு மட்டும் திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ஒரு விலையுர்ந்த 143 பிராண்ட் கைலி ஒன்றை பரிசாக தர திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் ரசிகர்களும் திரைக்கு வருவார்கள் படமும் வெற்றிபெறும் என்கிறார் தயாரிப்பாளர் ஆர்.நமச்சிவாயம்.

ரசிகர்களை எப்படியெல்லாம் தியேட்டருக்கு வர வேண்டியிருக்கு!