சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம்!

Get real time updates directly on you device, subscribe now.

Labyrinth film productions தயாரிப்பில், இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ”ஏஜென்ட் கண்ணாயிரம்” இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த் நடித்துள்ளார். மேலும் முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் 25 ஆம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குனர் மனோஜ் பீதா கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-

Related Posts
1 of 6

தெலுங்கு முன்னணி இயக்குனரான அணுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் மறு ஆக்கம் தான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் படம்.அந்த தெலுங்கு படத்தின் உரிமை என்னிடம் இருந்தது அதை கேள்விப்பட்ட சந்தானம் சார் என்னை அணுகினார். தெலுங்கில் இருப்பது போலவே தமிழில் இந்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை. காமெடி மற்றும் பஞ்ச் இரண்டையும் தான் உங்கள் ரசிகர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். அதை தவிர்த்து வேறு ஒரு பரிமாணத்தில் சந்தானத்தை இந்த படத்தில் பார்க்க நான் விரும்புகிறேன் என்று சந்தானம் சாரிடம் சொன்னேன்.அதன் பிறகு அவரும் ஒத்துக் கொண்டு இந்த கதைக்குள் வந்தார்.நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறோம்.

#AgentKannayiram