ஸ்மூத்தா போய்க்கிட்டிருக்கு ‘காஸ்மோரா’ : அப்போ ஏண்டா இப்படி..?
கார்த்தி நடித்த படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது ‘காஸ்மோரா’.
‘இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுல் இயக்கி வரும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக நயன் தாராவும், ஸ்ரீதிவ்யாவும் நடித்து வருகிறார்கள்.
ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும் படப்பிடிப்பு நடந்து கொண்டே இருக்கிறது.
இதனால் படத்துக்கு பைனான்ஸ் சிக்கல் அதனால் தான் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று செய்தி பரவ ஆரம்பித்து விட்டது.
தயாரிப்பாளர் தரப்பில் விசாரித்தால் அதெற்கெல்லாம் சான்ஸே இல்லை என்கிறார்கள்.
படத்துக்கு 11 செட்டுகள் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. இதுவரை மூன்று செட்டுகளைப் போட்டு படப்பிடிப்பு நடத்தி விட்டோம்.
இன்னும் எட்டு செட்டுகள் போட்டு படப்பிடிப்பு பாக்கி உள்ளது. ஒவ்வொரு செட்டிலும் ஒவ்வொரு கெட்டப் என கார்த்தி மொத்தம் 11 கெட்டப்புகளில் வருகிறார்.
செட்டுகளுக்கும், அவரது கெட்டப்புகளுக்கும் அதிக நேரம் எடுப்பதால் தான் படப்பிடிப்பு முடிய தாமதம் ஆகிறது. மற்றபடி படத்துக்கு பைனான்ஸ் சிக்கல் எல்லாம் இல்லை என்கிறார்கள்.
ஸ்மூத்தா தானே போய்க்கிட்டிருக்கு ‘காஸ்மோரா’, அப்போ ஏண்டா இப்படி பீதியை கெளப்புறீங்க..?