சிவகார்த்திகேயன் மீது தாக்குதல் : அஜித் ரசிகர்களை கோர்த்து விட்டது விஜய் ரசிகர்களா..?

Get real time updates directly on you device, subscribe now.

vijay1

சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் தாக்கியது கமல் ரசிகர்கள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தாக்கியது கமல் ரசிகர்கள் தான் என்பதை சிவகார்த்திகேயன் தரப்பு அடித்துச் சொல்கிறது. கமலோ தாக்கியவர்கள் என்னுடைய ரசிகர்களே இல்லை என்றார் முகத்தில் எந்த எக்ஸ்பிரசனும் இல்லாமல்.

தாக்குதலைக் கேள்விப்பட்ட மதுரை போலீசார் நேற்றே தாக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் தலையிட்டு அவர்களை மன்னித்து விட்டு விடுங்கள் என்று சொல்லியதன் பேரில் கைது நடவடிக்கை எதுவும் இல்லை.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் அஜித் ரசிகர்களை கோர்த்து விட்டிருக்கிறார்களாம் விஜய் ரசிகர்கள்.

இந்த விவகாரத்தில் அப்பாவி நடிகர் ஸ்ரீகாந்த்தும் சிக்கிக் கொண்டது தான் உச்சக்கட்ட காமெடி.

Related Posts
1 of 40
IMG-20150922-WA0014
சிவகார்த்திகேயனை அஜித் ரசிகர்கள் தாக்கியதாக நடிகர் ஸ்ரீகாந்த் பெயரில் பரவிய ட்வீட்!

சிவகார்த்திகேயனை தாக்கியது அஜித் ரசிகர்கள் தான். இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று ஸ்ரீகாந்த் கூறியதாக நேற்று ஒரு ட்வீட் பரவியது.

ரஜினிகாந்த், அஜித் ரசிகர்கள் அனைவரும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு கொடுத்து வந்த நிலையில் இப்படி ஒரு ட்விட் பரவ ஆரம்பித்ததும் பதறிப்போய் விட்டார் ஸ்ரீகாந்த்.

அதன் பிறகு தான் தெரிந்தது அது ஸ்ரீகாந்த் பெயரில் உள்ள போலி அக்கவுண்ட் என்று. பிறகு ஸ்ரீகாந்த் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று.

சம்பந்தமே இல்லாமல் அஜித் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கினார்கள் என்று செய்தியை பரப்பியது விஜய் ரசிகர்களாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்த அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுக்க சரியான தருணத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள்.

‘புலி’ வருதுடோய்…