மணிரத்னம் காலிங் : என்ன செய்றது கால்ஷீட் இல்லையே..?
‘இது என்ன மாயம்’ ரிலீசாவதற்கு முன்பே கைவசம் ‘ரஜினிமுருகன்’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, பாபி சிம்ஹாவுடன் ‘பாம்பு சட்டை’ படங்களில் பிஸியாகியிருக்கிறார் கேரள வரவான கீர்த்தி சுரேஷ்.
இதற்கிடையே கார்த்தி – துல்கர்சல்மானை வைத்து புதுப்பட வேலைகளை ஆரம்பித்திருக்கிறார் மணிரத்னம்.
படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் வேகம் எடுத்தாலும் படத்தின் கதாநாயகியை முடிவு செய்யாமல் இருந்தவர் திடீரென்று ஒருநாள் கீர்த்தி சுரேஷைக் கூப்பிட்டு ஆடிசன் பார்த்திருக்கிறார்.
மனசுக்கு திருப்தி. ஆனால் கீர்த்தி தான் என்ன செய்வதென்று இப்போது கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம்.
கைவசம் இருக்கும் படங்களே இன்னும் முடியாத நிலையில் ஒருவேளை மணிரத்னம் அவருடைய படத்துக்கு கூப்பிட்டால் எப்படி தேதிகளை ஒதுக்கிக் கொடுப்பது? என்று கவலை கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
நியாயமான கவலைதான்!