செப்.1-ம் தேதி ‘கபாலி’ பர்ஸ்ட் லுக்!
நேற்று 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் ‘கபாலி’ படத்தின் போட்டோஷூட் சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ரகசியமாக நடைபெற்றது.
படத்தில் ரஜினிக்கு இரண்டு விதமாக கெட்டப்புகள் என்பதால் விதவிதமான கோணங்களில் போட்டோக்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள்.
அடுத்த மாதம் செப்டம்பர் 18-ஆம் தேதி முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளது.
இதற்கானஆயத்தப் பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ‘கபாலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற செப்-1 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக படப்பிடிப்பு ஆரம்பமாகும் தினமான செப்டம்பர் 18-ஆம் தேதி தான் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் தாங்களாகவே ரஜினியின் புகைப்படங்களை வைத்து விதவிதமாக டிசைன்களை தயாரித்து வெளியிடுவதால் அவர்களை காக்க வைக்க வேண்டாம் என்பதால் தேதியை மாற்றினார்களாம்.