கை நழுவிப் போவுது! : கவலையில் கீர்த்தி சுரேஷ்

சம்பளத்தில் கறார் காட்டுவதில்லை, கொடுக்கிற ஷூட்டிங் ஸ்பாட் வசதிகளில் குறை சொல்வதில்லை. கால்ஷூட் சொதப்புவதில்லை போன்ற முக்கிய தகுதிகளை கீர்த்தி நேர்த்தியாக கடைபிடித்ததால் எல்லா இயக்குநர்களும் அவரையே தங்கள் படங்களில் ஹீரோயினாக கமிட் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.
அந்த பொறுப்புணர்ச்சியே அவருக்கு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் வாய்ப்பையும் கொடுத்திருக்கிறது.
இருந்தாலும் விஷாலுடன் ஒரு படம், மணிரத்னம் இயக்குவதாக இருந்த புதுப்படம் ஆகிய படங்களோடு லேட்டஸ்ட்டாக ”கவலை வேண்டாம்” பட வாய்ப்பு என ஒரே நேரத்தில் மொத்தம் மூன்று பட வாய்ப்புகள் கீர்த்தியை விட்டு கை நழுவிப் போயிருக்கிறது.
ஏன் தேடி வந்த வாய்ப்புகள் கையை விட்டுப்போயின என்பதற்கான உண்மைக் காரணம் தெரியாமல் கவலையில் இருந்தவரை நல்ல வேளையாக அண்டை மாநிலமான தெலுங்கு தேசம் தாங்கிப் பிடித்திருக்கிறது.
சமீபத்தில் தான் தெலுங்கில் கீர்த்தி நடித்த ‘நேனு சைலஜா’ படம் ரிலீசானது.
எதிர்பார்த்ததை விட பெரிய ஹிட்டாகியிருப்பதால் உற்சாகம் அடைந்திருக்கும் கீர்த்தி ”தொடர்ந்து உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்” என்றும் ரசிகர்களிடம் அன்பொழுக கேட்டிருக்கிறார்.
கண்டிப்பா கொடுத்திருக்குப்பா…