கொடைக்கானலில் கீர்த்தி சுரேஷ்!
தேசிய விருது வாங்கிய சந்தோஷத்தில் அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார் கீர்த்தி சுரேஷ்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் இப்படத்தை கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை செய்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் ஆரம்பமாகியிருக்கிறது. இப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக படக்குழுவுடன் அங்கு சென்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது.