கொலைச்சேவல்- விமர்சனம்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். அங்கு நிறைசூலி என ஒரு தெய்வம் உண்டு. அந்தத்தெய்வத்திற்கு நிறைமாத கர்ப்பிணி பெண்கள் வந்து கொலைச்சேவல் பலியிட்டு வழிபட வேண்டும் என்பது மரபு. அதைப்பின்பற்ற கலையரசன் தன் கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட குடும்பத்தோடு வருகிறார். கலையரசன் ஒடுக்கப்பட்டச்சாதியைச் சேர்ந்தவர். நாயகி தீபாபாலு ஆதிகச்சாதியைச் சேர்ந்தவர். அதனால் நாயகியின் குடும்பம் நிறைசூலி தெய்வத்தை வழிபட காட்டுக்குள் வரும் இவர்களை கட்டங்கட்டி கொல்ல முயற்சிக்கிறது. ஆதிக்க வெறியிலிருந்து இந்த ஜோடி தப்பித்ததா என்பதே கதை
ஆணவப்படுகொலைகளுக்கு என்றே நேர்ந்து விடப்பட்ட நாயகனாக கலையரசன். இயல்பாக நடித்துள்ளார். தீபாபாலு படத்தின் ஆன்மாவாக இருக்கிறார். அவரின் நடிப்பு தான் படம்மீதான பெரும் மரியாதையை ஏற்படுத்துகிறது..கஜராஜ் பாலசரவணன் உள்ளிட்ட பலரும் ஒகே ரகம்
PG.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் தரமான சம்பவம். ஆகச்சிறப்பான ஒளிப்பதிவை தந்துள்ளார். நல்ல நல்ல லோகேசன்களும் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் சந்தன் படம் கடத்தும் உணர்வுகளுக்கேற்ப இசைத்துள்ளார்.
கதை நமக்குப்பழக்கப்பட்ட கதை என்பதால் படம் துவங்கும் போதே முடிவு தெரிந்துவிடுகிறது. அந்த முடிவை சற்று மாற்றி இயக்குநர் யோசித்திருக்கலாம். படம் நிறைய நாடகத்தனங்களை கொண்டிருப்பதும் மைனஸ். எதோ ஆணவக்கொலைக்கு எதிரான படம் என்பதால் மட்டும் லேசாக ஆதரிக்கலாம்
2.75/5