வீரன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழில் பலரும் முயற்சி செய்து பஞ்சராகிப் போன ஒரு சூப்பர் ஹீரோ கதை தான் வீரன்

சிறுவயது ஹிப்ஹாப் ஆதியை மின்னல் தாக்கிவிடுகிறது. அந்தத் தாக்குதலுக்கு காரணம் ஊரின் காவல் தெய்வம் வீரன் தான் எனச்சொல்லப்படுகிறது. ஆனால் அந்தத் தாக்குதல் மூலமாக ஆதிக்கு இன்னும் அதீத சக்திகள் எல்லாம் கிடைக்கிறது. இந்நிலையில் ஆதியின் ஊருக்குள் கரன்ட் பைப் மூலம் ஒரு திட்டம் அமல்படுத்த இருக்கிறது. அந்தத் திட்டத்தால் மக்களுக்குப் பாதிப்பு இருப்பதை உணர்ந்த ஆதி எப்படி தன் அதீத சக்திகளை வைத்து அந்தத் திட்டத்தை ஒழிக்கிறார் என்பதாக படத்தின் மீதிக்கதை சோகக்கதையாக விரிகிறது

தனக்குப் பொருத்தமே இல்லாத சட்டையை அணிய முயற்சித்துள்ளார் ஆதி. எமோஷ்னல், காமெடி, ஆக்‌ஷன் என எந்தக் காட்சியிலுமே அவரது ஆக்டிங் பொருந்தவில்லை. ஹீரோயின் கேரக்டரும் இம்ப்ரஸிவாக இல்லை. கொங்கு தமிழ் நண்பனாக வருபவர் மட்டும் லைட்டாக கவனிக்க வைக்கிறார். மேலும் ஹீரோயினைப் பொண்ணுக்குப் பார்க்க வரும் மாப்பிள்ளை கேரக்டர் கச்சிதம். முனிஷ்காந்த் காளிவெங்கட் கூட்டணி காமெடி செய்ய பெரும் சிரத்தை எடுத்துள்ளது. வில்லன்
வினய் படத்திற்கு எந்தத் துணையும் செய்யவில்லை.

பின்னிணி இசை பாடல்கள் இரண்டும் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஒளிப்பதிவு மட்டும் பொள்ளாச்சி அழகை அள்ளிக் கொடுத்துள்ளது

வீரனின் தடுமாற்றம் இலக்கில்லாத பயணத்தில் இருந்தே துவங்கி விடுகிறது. ஆன்மிகம், அறிவியல், மாயாஜாலம் என தடம் புரண்டு பயணிக்கும் திரைக்கதை நம்மை படத்தோடு ஒன்ற விடாமல் செய்துவிடுகிறது. மலையாளத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த மின்னல் முரளி படத்தின் பாதிப்பு நிறைய இடங்களில் தெரிகிறது. ஆனால் அதில் நிகழ்த்தப்பட்ட மேஜிக் இதில் துளியும் நிகழ்த்தப்படவில்லை

வீரன்- விளையாட்டுப்பிள்ளை
2.5/5

#veeran #வீரன்