நவம்பரில் வெளியாகிறது சமந்தாவின்‘யசோதா’!

Get real time updates directly on you device, subscribe now.

பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது.மதிப்புமிக்க ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.

படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில்,

Related Posts
1 of 6

“’யசோதா’ இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது. இந்தக் கதைக்காகவும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத்தமும் வியர்வையும் கொடுத்து உழைத்திருக்கிறார். சமந்தாவுடன் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

#Yashoda #யசோதா