குருதி ஆட்டம்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பலகாலமாக நல்லபடங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ள அதர்வா குறுதி ஆட்டத்திலும் அதை உறுதி செய்துள்ளார். ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்‌ஷன் படத்தை எடுத்தால் கமர்சியலாக கல்லா கட்டிவிடலாம் என்று யாரோ இயக்குநருக்கும் அதர்வாவிற்கும் காதில் ஓதியிருக்கிறார்கள். அதனால் தான் படத்தில் நம் காது நிறைய பூக்களை வைத்துள்ளனர்

மதுரையில் எளிமையான ஆனால் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் அதர்வா வாழ்வில் ஒரு வன்முறைக் கும்பல் வந்து மோதுகிறது. அந்த வன்முறைக்கு பின்னால் இருக்கும் துரோகம் வலி எல்லாம் படத்தின் திரைக்கதையாக விரிகிறது

ஆக்‌ஷன் காட்சிகளில் அதர்வா நல்ல எபெக்டிவாக நடித்துள்ளார். செண்டிமெண்ட் காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். பிரியபவானி சங்கர் தூக்கம் கலைந்த சோர்வோடே படமெங்கும் வருகிறார். ராதிகா மட்டுமே தன் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். முத்து கேரக்டரில் நடித்துள்ள கண்ணா ரவி நச் நடிப்பு

Related Posts

ஒண்ணுமே இல்லாத படத்திற்கு ஒன்றாவது ப்ளஸ் ஆக இருக்கணும் என்று யுவன்சங்கர் ராஜா தாறுமாறாக உழைத்திருக்கிறார். இருப்பினும் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஒளிப்பதிவில் குறைகள் பெரிதாக இல்லை என்பது ஆறுதல். எடிட்டர் இப்படத்தை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மைண்ட் செட்டில் வெட்டியிருப்பார் போல. சோ சேட்
காட்சிக்கு காட்சி அவ்ளோ ஜம்பிங்

தெளிவற்ற திரைக்கதை, முடிவற்ற லாஜிக் கேள்விகள், தடுமாற்றம் நிறைந்த மேக்கிங் என குருதி ஆட்டம் முதல் ஆட்டத்திலே தத்தளிக்க வைத்துள்ளது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஸ்ரீகணேஷ்& அதர்வா

2/5