சீரியலுக்கு முழுக்கு போட்ட ‘கல்யாணம் முதல் காதல் வரை’ ப்ரியா! : சினிமாவில் கதாநாயகி ஆனார்…
பெரிய திரையைப் போலவே இப்போது சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் பெருக ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த லிஸ்ட்டில் ஒரு சீரியலில் நடித்தே தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெருக்க வைத்தவர் ”கல்யாணம் முதல் காதல் வரை” சீரியலின் நாயகி ப்ரியா பவானி சங்கர்.
ஆரம்பத்தில் ”புதிய தலைமுறை” செய்திச் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா அந்த சேனலிருந்து விலகி சில சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். சில விளம்பரப் படங்களிலும் தலை காட்டினார். பின்னர் அவருடைய கொள்ளை அழகை குறி வைத்த விஜய் டிவி ”கல்யாணம் முதல் காதல் வரை” சீரியலில் அதிக சம்பளம் கொடுத்து நாயகி ஆக்கியது.
சில எபிசோடுகளுக்குப் பிறகு திடீரென்று அந்த சீரியலிருந்து விலகிய அவரைப்பற்றி அமெரிக்காவுக்குப் படிக்கப் போகிறார் என்றும், ஆஸ்திரிரேலியாவில்இருக்கின்ற தனது காதலரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றும் செய்திகள் வெளியானது.
அதன்பிறகு இடையில் எந்த சத்தமும் இல்லாமல் இருந்த ப்ரியா இப்போது மீண்டும் தன் அபிமான ரசிகர்களுக்கு தரிசனம் தர தயாராகியிருக்கிறார். இந்தமுறை தான் நம்பிய சின்னத்திரைக்குப் போகவில்லை. மாறாக பெரிய திரையில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
பிரபல டைரக்டர் ஒருவர் இயக்கும் புதுப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் ப்ரியா. அது எந்தப்படம்? யார் அந்த இயக்குநர்? போன்ற விபரங்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமாம்!
பொதுவாக சின்னத்திரையில் நடித்தே பழக்கப்பட்ட நட்சத்திரங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் பெரிய திரையில் தலை காட்ட மாட்டார்கள். ஆனால் ப்ரியாவோ ஒரே ஒரு சீரியலில் அதுவும் முழுமையாகக் கூட நடிக்காமல் பெரிய திரையை நோக்கி வந்திருப்பது அவர் நம்பிப் போன சின்னத்திரை எதிர்பார்த்த சம்பளத்தை தரவில்லை. அந்தக் கோபம் தான் அவரை பெரிய திரையை நோக்கி வர வைத்திருப்பதாக தெரிகிறது.
எப்படியோ நடிக்க வந்தீங்களே…? அது போதும் டார்லிங்…