எந்த ஹீரோவுக்கும் தங்கச்சியாக நடிக்க மாட்டேன் : லட்சுமிமேனன் திட்டவட்டம்
சென்ற வருடம் ரிலீசான படங்களில் அஜித்தின் ‘வேதாளம்’ தான் அதிக வசூலோடு முதலிடத்தைப் பிடித்தது. அப்படிப்பட்ட பெருமைக்குரிய படத்தில் தங்கச்சி கேரக்டரில் நடித்திருந்தார்.
தொடர்ந்து நான்கைந்து படங்களில் நாயகியாக நடித்து விட்டு திடீரென்று தங்கச்சி கேரக்டரில் அதுவும் அஜித்துக்கு தங்கச்சி என்றதும் அவரை விட அவரைச் சுற்றியுள்ளவர்கள் தான் பதறிப்போனார்களாம்.
”வேதாளம் படத்துல நான் தங்கச்சி கேரக்டர்ல நடிக்க சம்மதம் சொன்ன உடனே நெறைய பேர் என்கிட்ட போன் பண்ணி அந்த கேரக்டர்ல நடிக்காதே.., கேரியரே வீணாப்போயிடும், அந்த மாதிரியான கேரக்டர்ல உங்களுக்கு ஸ்கோப்பும் இருக்காதுன்னு சொன்னாங்க. ஆனா நான் கதையைக் கேட்டப்போ எனக்கு முக்கியத்துவம் இருக்கும்னு தோணுச்சு. என்னோட கேரக்டரும் பேசப்படும்னு தோணுச்சு, அதேமாதிரி படம் பெரிய ஹிட் ஆகியிருக்கு.
என்றவரிடம் அஜித்துடனே இன்னொரு படத்தில் தங்கச்சியாக நடிக்கக் கூப்பிட்டால் நடிப்பீர்களா? என்று கேட்டபோது அஜித்துடன் மட்டுமில்லை. இனி எந்த ஹீரோவுக்கு தங்கச்சியாக நடிக்கக் கூப்பிட்டாலும் கண்டிப்பா போக மாட்டேன் என்றார்.
