கெடைச்சா சுறா மீனு… இல்லேன்னா..? : ஹன்ஷிகாவுக்கு நூல் விடும் சிம்பு

Get real time updates directly on you device, subscribe now.

simbu

மீபத்தில் ரிலீசான ‘இது நம்ம ஆளு’ படத்தின் ட்ரெய்லரைப் பற்றித்தான் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.

மேற்படி ட்ரெய்லரில் நிஜ வாழ்க்கையில் சிம்புவும், நயன்தாராவும் செய்த காதலைப் பற்றி பேசிக்கொள்வது போல வந்த வசனங்களைப் பார்த்து அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டது உண்மை.

‘இன்னும் நீ எத்தனை பேரைத்தான் காதலிப்பே..?’ என்று நயன்தாரா கேட்பதும், ”முதல்ல நீங்க விடுங்க, அப்புறம் நாங்க விடுறோம்” என்று சிம்பு பதில் சொல்வதுமாக எடிட் செய்யப்பட்ட அந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறதாம்.

Related Posts
1 of 36

இதற்கிடையே ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு இன்னும் கலர் கொடுப்பதற்காக சிம்புவின் இன்னொரு மாஜி காதலியான ஹன்ஷிகாவையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

படத்தில் சிம்பு ஒரு கொரியன் பெண்ணை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகிறது. ( அங்கேயுமா..?  அதில் தான் கொரியன் பெண்ணாக ஹன்ஷிகாவை நடிக்க வைத்து இதேபோல சில நிஜ வாழ்க்கை வசங்களை வைத்தால் படத்துக்கு இன்னும் ப்ளஸ் ஆக இருக்கும் என்று நம்புகிறாராம் சிம்பு.

இதனால் டைரக்டர் பாண்டிராஜை நச்சரித்து வரும் சிம்பு நான் கால்ஷூட் வாங்கித் தருகிறேன் என்று கூறியிருப்பதால் டைரக்டரும் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

ஹன்ஷிகாவுக்கு நூல் விட்டுப் பார்க்கிறார் சிம்பு… கெடைச்சா சுறா மீனு… இல்லேன்னா… கெழுத்தி மீனு…