‘அருவி’ படத்தைப் புறக்கணித்த முன்னணி நடிகைகள் – என்ன காரணம் தெரியுமா?
இந்த வார ரிலீசில் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டுகளை பெற்று, நல்ல வசூலோடு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘அருவி.’
பாலுமகேந்திராவின் மாணவரான அருண் பிரபு இயக்கியிருக்கும் இப்படத்தில் அருவியாக புதுமுகம் அதிதி பாலன் நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பையும் பாராட்டாதவர்களே இல்லை.
குறிப்பாக எந்த ஒரு அறிமுக நாயகியும் முதல் படத்திலேயே நடிக்கத் துணியாத அழுத்தமாக கேரக்டரில் நடித்தது தான் பாராட்டுகள் குவிய முக்கிய காரணம்.
இப்படி பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் அள்ளிக்குவித்து வரும் நாயகி அதிதி பாலன் ஏற்று நடித்த அருவி கேரக்டரில் முன்னதாக முன்னணி நடிகைகளில் யாராவது ஒருவரைத்தான் நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் அருண் பிரபு.
அதற்காக முதலில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலனிடம் பேசிப் பார்த்திருக்கிறார். கதை பிடித்திருந்தாலும் அந்த கேரக்டருக்கு வரும் நோய் மற்றும் அதற்காக உடல் எடையைக் குறைப்பது போன்ற விஷயங்களைச் செய்ய முடியாது என்று தவிர்த்திருக்கிறார்.
அவர் மறுப்பு சொன்னதும் அடுத்து பிரபல நடிகை நயன்தாராவிடம் பேசிப்பார்த்திருக்கிறார்கள். இதே நிறுவனம் தயாரித்த மாயா படத்தில் நாயகியாக நடித்தவர் என்பதால் கண்டிப்பாக சம்மதம் சொல்லுவார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் நயன்தாராவும் வித்யாபாலன் சொன்ன காரணத்தோடு அந்த மாதிரியான கேரக்டரில் நடித்தால் என்னுடைய இமேஜ் என்னாவது என்று நடிக்க மறுத்து நோ சொல்லி விட்டாராம்.
பிறகு தான் சரி ஒரு புதுமுகத்தை நடிக்க வைத்து விடலாம் என்கிற முடிவுக்கு வந்து அதற்காக கிட்டத்தட்ட 500 பெண்களின் புகைப்படங்களைப் பார்த்து அதில் ஒருவராக அதிதிபாலனை தேர்ந்தெடுத்து அருவியாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அருண் பிரபு
செலக்ஷன் சூப்பர்ப் ப்ரோ..!