LGM-விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஊபர் புக் பண்ணி கால் மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு காலாற நடந்தும், உடலால் ஊர்ந்தும் சென்றால் என்னவாகும்?

ரொம்ப டயர்ட் ஆகும்! யெஸ் அதைத்தான் செய்துள்ளது LGM

காதலனோடு இல்லற வாழ்வைத் துவங்கும் முன் சிலபல கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகுமா என்று கேட்டால் பரவாயில்லை. காதலனின் அம்மாவிற்கும் தனக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகவேண்டும் என்று கேட்கிறார் இவானா! தன் அம்மா நதியாவிடம் இதைச் சொல்ல முடியாமல் வேறு எதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி இவானா பேமிலியோடு நதியாவையும் ஒரு டிரிப்-க்கு அழைத்துச் செல்கிறார் ஹரிஷ் கல்யாண். டிரிப்பில் நடக்கும் ரகளையான கலவரங்கள் தான் படத்தின் கதை

ஹீரோ ஹரிஷ் கல்யாணுக்குச் சொல்லிக்கொள்ளும் படி இன்ட்ரெஸ்டிங்கான கேரக்டர் எல்லாம் இல்லை. மிகவும் ஆவ்ரேஜ் ஆன கேரக்டர் என்பதால் அவரும் உற்சாகமின்றியே நடித்துள்ளார். இவானா லைப்-ஐ ஜாலியாக என்சாய் பண்கிற பெண்ணாக வருகிறார். அதனால் அதே மூடில் நடித்துள்ளார். யோகிபாபு ஒரு சுகர் வந்த பெரியவரை கலாய்த்து சிரிப்பு காட்ட முயன்று தோற்றுள்ளார். ஆர்.ஜே விஜய் ஒருசில இடங்களில் கைத்தட்டல் பெறும்படி காமெடி செய்துள்ளார். தன் அனுபவம் மூலமாக கிடைத்த எல்லா ப்ரேம்களிலும் ஸ்கோர் செய்கிறார் நதியா

இயக்குநர் ரமேஷ் தமிழ்மணியே இசையமைப்பாளர் என்பதில் இவ்வளவு மைனஸ் இருக்குமா? நிறைய இடங்களில் பழைய ஸ்டாக் மியூசிக்கை வைத்தே ஒப்பேற்றியது போல இருக்கிறது. பாடல்களில் ஒன்று மட்டும் ok. ஒளிப்பதிவு ஒரு காஸ்ட்லியான சீரியல் போலவே இருக்கிறது

ஒரு ஷாட்பிலிமாக எடுக்கும் தரத்தில் உள்ள கதைக்கு இவ்வளவு செலவு செய்து இப்படி சூரமொக்கை செய்ய வேண்டுமா? என்ற கேள்வி படம் பார்க்கும் போது எழுந்தது. படத்தை நகர்த்த வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட காட்சிகளில் எல்லாம் ரசிகன் நல்ல தூக்கத்திற்கு தயாராகிறான் என்பது பெருஞ்சோகம். LGM-மை பார்த்துக்கொண்டிருக்கும் போதே பக்கத்து சீட்டில் ஒரு டயலாக் வந்தது..Let’s get run.

2/5