‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ – நம்புங்க இது படத்தோட டைட்டில் தான்!

Get real time updates directly on you device, subscribe now.

‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ என்ற வித்தியாசமான டைட்டிலில் புதுமுகங்கள் நடிக்க படமொன்று தயாராகி வருகிறது.

அண்ணாமலை தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஏ.சரவணன் தயாரிக்கும் இப்படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் நளினி நாடோடிகள் கோபால், கோதண்டம் பரோட்டா முருகேஷ் ஈரோடு முருகசேகர், திடியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பாலாவின் ஒளிப்பதிவில், செளந்தர்யன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சு.சத்தியசீலன்.

படம் பற்றி படத்தின் இயக்குனர் சு.சத்தியசீலனிடம் கேட்டபோது… ”இது முழுக்க முழுக்க ஃபேமிலி காமெடி சப்ஜெக்ட். இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பது தான் எங்களது நோக்கம்.

Related Posts
1 of 134

தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார். தியேட்டரில் மக்கள் என்ன மாதிரியான படங்களை ரசிக்கிறார்கள். என்ன மாதிரியான காட்சிகளை கை தட்டி ரசிக்கிறார்கள். என்ன மாதிரியான படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பது அத்துப்படி.

அப்படிப்பட்ட சரவணன் தேர்ந்தெடுத்த கதை தான் இந்த ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ கதை. அந்த குடும்பத்தை பார்ப்பதே தப்பு என்று இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிற பகை.

அப்படிப்பட்ட இரண்டு குடும்பத்தை சேர்ந்த பையனும் பெண்ணும் காதலித்தால் என்ன ஆகும். முந்தைய தலைமுறை மோதிக் கொள்ள, அடுத்த தலைமுறை காதல் கொள்வது என்பது எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்பது தான் திரைக்கதை. படப்பிடிப்பு முழுவதும் ஈரோடு மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் நடைபெற்றுள்ளது. இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது” என்றார்.