ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ‘லவ் இங்க்’!

எம்ஆர் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் ‘லவ் இங்க்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார். இது தற்கால உறவுகளைச் சுற்றி வரும் ரோம்-காம் திரைப்படம். இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் ‘லவ் இங்க்’ என்ற சொல் மிகவும் பிரபலம். தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களையோ அல்லது காதல் சின்னத்தையோ ஜோடிகள் டாட்டூ போட்டுக் கொள்வதுதான் ‘லவ் இங்க்’. இதனால், ஜோடிகளுக்கு இடையில் காதல் கூடுகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால், இதன் இன்னொரு பக்கத்தை சொல்ல வேண்டும் என்றால் Upgraded version of possessiveness. இப்படியான காதலர்களைச் சுற்றிதான் ‘லவ் இங்க்’ படம் நகர்கிறது. இதோடு படத்தில் ஃபன், ஆக்ஷன் மற்றும் எண்டர்டெயின்மெண்ட்டும் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முழுப் படமும் சென்னை மற்றும் தஞ்சை பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. மூன்று கட்டங்களாகப் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு குறுகிய காலத்திற்குள் முடிக்கப்படும்.