வெள்ள நிவாரண நிதி : 5 கோடி ரூபாய் கொடுத்தது லைகா!
நேற்று முன் தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்துவக்க விழாவும், படப்பிடிப்பும் மிக எளிமையாக நடைபெற்றது. அடுத்த நாளே மீடியாக்களை சந்தித்த அக்குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா இனி தொடர்ந்து பெரிய, நல்ல கதையம்சமுள்ள சிறிய பட்ஜெட் படங்களையும் தயாரிக்கப் போவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது :
லைகா நிறுவனம் ஹிந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தயாரிக்கும்
ஜெகன் இயக்கும் ‘இக்கா’ என்ற படத்தையும் தயாரிக்கிறது.
தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க ராம் சரண் தேஜ் உடன் இணைந்து ‘கத்தி’ படத்தின் ரீமேக்கையும் தயாரிக்க உள்ளது.
லைகா நிறுவனத்தின் மாபெரும் வெற்றி படமானகத்தயை தொடர்ந்து இந்திய துணை கண்டத்தின் இருபெரும் சிகரங்களை ஒருங்கிணைத்து இமாலய முயற்சியாக பெரும் பொருட் செலவில் 2.O ( 2.ஒ) என்கிற படத்தை தயாரிக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாயகி எமி ஜாக்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
பெரும் பட்ஜெட் படங்களையே லைகா நிறுவனம் தயாரிப்பதாக சொல்லி வருவதை பொய்பிக்கும் வகையில் கதைக்கு முக்கியத்துவம் அளித்து ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க சாம் ஆண்டன் இயக்கத்தில் சிறிய பட்ஜெட் படத்தையும் தயாரிக்கிறது.
அதோடு இந்த தருணத்தில் தமிழக மக்களின் பெரும் துயரத்தில் லைகா நிறுவனமும் பங்கெடுக்கும் வகையில் நேற்று மாலை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் திரு. சண்முகம் அவர்களை லைகா நிறுவனத் தலைவர் திரு. சுபாஷ்கரன் அவர்கள் சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
இவ்வாறு லைகா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.