மீண்டும் ரஜினியோடு கை கோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
கொடுத்த பட்ஜெட்டை விட குறைவான பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தால் எந்த இயக்குனரைத் தான் தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போகும்?
அப்படி லைகா புரொடக்ஷன்ஸ் குட்புக்கில் இடம் பிடித்து மீண்டும் அந்த நிறுவனத்துடனே இன்னொரு படத்தில் இணைகிறாராம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது லைகா தயாரிப்பில் ரஜினி நடிப்பில் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார். அலெக்ஸ் பாண்டியன் படத்துக்குப் பிறகு 25- ஆண்டுகள் கழித்து ரஜினி இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை சொன்ன பட்ஜெட்டை விட குறைவான தொகையில் முடித்துக் கொடுத்திருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அவருடைய இந்த சிக்கனத்தை பார்த்து பிரமித்துப் போன அந்த நிறுவனம் மீண்டும் ரஜினியை வைத்து நீங்களே ஒரு படம் இயக்கிக் கொடுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறதாம்.
லட்டு திண்ண கசக்குமா என்ன? ஏ.ஆர்.முருகதாஸூம் ஓ.கே சொல்லியிருக்கிறார்.