கலைஞானத்துக்கு வீடு – சொன்னதைச் செய்த ரஜினி
ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய கதாசிரியர் கலைஞானத்துக்கு சமீபத்தில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ கலைஞானத்துக்கு சொந்த வீடு இல்லை. அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். அதே விழாவில் பேசிய ரஜினி கலைஞானம் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் என்ற தகவல் இப்போதுதான் எனக்கு தெரிகிறது. வருத்தமாக உள்ளது. கலைஞானத்திற்கு வீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சொன்ன அமைச்சருக்கு நன்றி. அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்க மாட்டேன். கலைஞானத்திற்கு நானே வீடு வாங்கித் தருகிறேன்.” என்று தெரிவித்தார்.
ரஜினி வாக்குறுதி கொடுத்து பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில் பலரும் ரஜினி கலைஞானத்துக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். நேற்று தனது வாக்குறுதியை நிறைவேற்றினார் ரஜினி.
ஆமாம்சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 3 படுக்கை அறை வசதி கொண்ட வீட்டை கலைஞானத்துக்கு ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்துள்ளார்.
சரஸ்வதி பூஜை தினமான நேற்று காலை புது வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த், பூஜையறையில் குத்து விளக்கேற்றி, பாபா படம் ஒன்றையும் கலைஞானத்துக்கு பரிசளித்தார். கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ரஜினிக்கு குடும்பத்தாருடன் நன்றி தெரிவித்தார் கலைஞானம்.