சிம்பு வந்திருக்கணும் இல்லை வரணும்!

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 16

ரிப்பீட்டு என்ற ஒற்றை வார்த்தை ட்ரெண்ட் ஆனது மாநாடு படத்தின் வெற்றியால் தான். அந்த வெற்றிக்கு பத்திரிகையாளர்கள் பெருங்காரணம். அதனால் பத்திரிகையாளர்களுக்கு நன்றி நவிழும் விதமாக இன்று ஒருவிழாவை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு, இசைஇசை அமைப்பாளர் யுவன், நடிகர் எஸ்.ஜே சூர்யா, ஒய்சி மகேந்திரன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்ட படக்குழு மொத்தமும் கலந்துகொண்டனர். ஆனால் சிம்பு மட்டும் வரவில்லை. அது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. பல வருடங்களுக்குப் பிறகு தன் பட வெற்றிவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் சிம்பு இப்படி மிஸ் பண்ணிவிட்டாரே என்ற ஆதங்கம் எல்லாருக்கும் இருந்தது. இதை தனது பேச்சில் இயக்குநர் எஸ்.ஏ. சி குறிப்பிட்டார்