இன்னும் கெத்தா வருவேன்! : சிவகார்த்திகேயன் சபதம்

Get real time updates directly on you device, subscribe now.

siva1

று மாசத்துக்கு ஒரு படத்தையாவது ரசிகர்களுக்கு கொடுத்து விட வேண்டும் என்கிற திட்டத்தோடு தான் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன்.

இடையில் ‘மான் கராத்தே’ தோல்வி, ‘ரஜினி முருகன்’ ரிலீஸ் பஞ்சாயத்து ஆகியவற்றால் அவரது திட்டம் அப்படியே மாறி விட்டது.

வெளி தயாரிப்பாளர்களை நம்பிப் போய் தனது மார்க்கெட்டை இழக்க விரும்பாதவர் தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து ”ரெமொ” படத்தை தயாரித்து வருகிறார்.

Related Posts
1 of 31

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகி வரும் படம் இதுதான். அதோடு தனது கால்களை சுருக்க விரும்பாத சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படம், ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம், மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களையும் தொடங்கி அகலக்கால் வைத்திருக்கிறார்.

ஏன் இப்படி அகலக்கால் வைக்கிறார் சிவகார்த்திகேயன் என்று விசாரித்தால் எல்லாம் இடைவெளியை இட்டு நிரப்பத்தான் என்கிறார்கள்.

இனி இடைவெளியே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்த சிவகார்த்திகேயன் தனக்கு எதிரான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தனது ஸ்டெடியான மார்க்கெட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் தான் இப்படி கெத்தாக சொந்தத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.