‘டேய் மாங்கா’ன்னு கூப்பிடுங்க… கோவிச்சுக்க மாட்டாராம் பிரேம்ஜி!
அண்ணன் வெங்கட் பிரபு படங்களிலேயே ஐந்த் பேர்களில் ஒருவராக ஒட்டிக்கொண்டு வரும் பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ படத்தில் சோலோ ஹீரோவாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்கிறார்கள்.
படத்தில் விஞ்ஞானி, பாகவதர் என இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். இந்தமாதம் 11-ம் தேதி ரிலீசுக்கு தயாரான நிலையில் நம்மை சந்தித்த பிரேம்ஜி மாங்கா டைட்டிலால் ஏற்பட்ட அவதிகளை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார்.
நான் இப்போ சொலோ ஹீரோவா நடிக்கிற அளவுக்கு வளர்றதுக்கு என் அண்ணன் வெங்கட்பிரபு தான் காரணம், அவன் தான் என்னை பெரிய பெரிய ஹீரோக்களோட சேர்ந்து நடிக்க வெச்சு என்னை வளர்த்து விட்டான்.
இந்தப்படத்துல என்னை ஹீரோவா கமிட் பண்ணின அப்புறம் என்கூட நடிக்கிறதுக்கு புதுமுகங்கள், ரெண்டு படங்கள் நடிச்ச நடிகைகளை கூட டைரக்டர் கேட்டுப் பார்த்தாராம். அவர்கள் எல்லாம் ஹீரோ பிரேம்ஜின்னு சொன்னதும் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். அது யார் யாருன்னு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன், அவங்களை எல்லாம் நான் பெரிய ஹீரோ ஆனதும் எனக்கு அம்மா, அக்காவா நடிக்க வைப்பேன் என்றவரிடம்
உங்களை ரசிகர்கள் மாங்கான்னு கூப்பிடுவாங்களே? உங்களுக்கு கோபம் வராதா? என்று கேட்டோம்…
எல்லா ரசிகர்களும் டேய் மாங்கான்னு தான் கூப்பிடுறாங்க… சென்னை 28, கோவா இந்தப் படங்கள் நடிக்கிறப்ப என்னை யாரும் திட்டல. மங்காத்தா நடிச்சதுக்கு அப்புறம் ட்விட்டர்ல திட்ட ஆரம்பிச்சுட்டாங்க, அது ஏன்னு எனக்கும் தெரியும், அப்பல்லாம் எனக்கு மனசுக்கு வருத்தமா இருக்கும்,
இப்போ திட்டு வாங்கி வாங்கி எல்லாம் மறத்துப் போச்சு. அதனால எவ்ளோ வேணும்னாலும் திட்டுங்கன்னு விட்டுடுவேன் என்றார் பிரேம்ஜி.