விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி – கேட்க நல்லாத்தான் இருக்கு… ஆனா?

Get real time updates directly on you device, subscribe now.

வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் அஜித் இணையும் நான்காவது படத்துக்கு ‘விஸ்வாசம்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

வரும் புத்தாண்டில் ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அஜித்துக்கு தான் சொன்ன நான்குவரிக் கதை பிடித்துப் போனதால், தற்போது படத்தின் திரைக்கதையை எழுதி முடிக்கிற வேலையில் மும்முரமாகியிருக்கிறார் சிவா.

Related Posts
1 of 55

மேலும் இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போகும் நாயகி பற்றிய முழுமையான விபரம் இன்னும் வெளியாகாத நிலையில் படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜித் படத்தில் நிவின் பாலியா? என்று ஆச்சரியப்பட்ட ரசிகர்கள் ஒருவேளை தம்பி கேரக்டரில் நடிக்கக் போகிறாரோ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதே சமயம் அப்படி வந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்திருக்கிறார் நிவின்பாலி.

விஸ்வாசம் படத்தில் நான் நடிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதே சமயம் அஜித் போன்ற தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.