மாரீசன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஃபகத் ஃபாசில் வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள மாரீசன் எப்படி இருக்கு?

ஜெயிலில் இருந்து வெளியாகும் ஃபகத் ஃபாசில் கிடைப்பதை எல்லாம் திருடி வாழும் இளைஞன். வடிவேலு வீட்டிற்கும் அப்படித் திருடச்செல்லும் அவருக்கு வடிவேலுவை தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் வருகிறது. இதற்கு மேல் கதையைச் சொன்னால் ட்விட்ஸ் உடைபடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்வோமாக

படத்தின் டைட்டில் கார்டில் முதல் பெயர் வடிவேலு. ஆக படத்தில் கதையின் நாயகன் அவரே. அவரின் காஸ்ட்யூம் நாம் இதுவரை நாம் பாத்திராதது. எளிமையான தோற்றத்தில் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். சில காட்சிகளில் வடிவேலு அந்தியப்பட்டு நிற்பதையும் சொல்ல வேண்டும். ஃபகத் ஃபாசிலுக்கு இது அல்வா சாப்பிடும் படியான கேரக்டர் என்பதால் புகுந்து விளையாடியுள்ளார். குழந்தைகளுக்கு எதிராக பாலியல் அத்துமீறலைப் பற்றி அறியும் போது ஃபகத் ஃபாசில் காட்டும் பெர்பாமன்ஸ் வாவ் ரகம். விவேக் பிரசன்னா முக்கியமான ரோலைச் செய்துள்ளார். சித்தாரா ஆழமாக மனதில் பதிகிறார்

கலைசெல்வன் சிவாஜி தேர்ந்த ஒளிப்பதிவைச் செய்துள்ளார். இரவுக்காட்சிகளும் திருவண்ணாமலை காட்சிகளும் சிறப்பாக உள்ளது
யுவன் சங்கர் ராஜா நீண்ட நாட்களுக்குப் பின் தரமான பின்னணி இசையைக் கொடுத்துள்ளார். ரிமேக் பாடல் கச்சிதமாக படத்தில் பொருந்தியுள்ளது

சிறுமிகளுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் கொடூரங்களை எழுத்தாக்கியுள்ளார் கதை திரைக்கதை வசனத்தை எழுதியுள்ள கிருஷ்ண மூர்த்தி. எழுதப்பட்டவற்றை நல்ல நல்ல காட்சிகளாக்கியுள்ளார் இயக்குநர் சதிஸ் சங்கர். படத்தின் க்ளைமாக்ஸ் கனமாக மனதில் நிற்கவில்லை. படத்தின் நீளமும் பெரிய மைனஸ். இவற்றைச் சரி செய்திருந்தால் மாரீசன் ஈர்த்திருக்கும்
2.75/5