தலைவன் தலைவி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு பாட்டு ஹிட்டு! அதனால் தலைவன் தலைவி படம் மீது ஒரு பாசிட்டிவ் நெடி இருந்தது! படம் பாசிட்டிவ் சேர்த்ததா?

படத்தின் கதைக்கு பெரிதாக பாண்டிராஜ் மெனக்கெடவில்லை. எல்லோர் வீட்டிலும் நடக்கும் கணவன் மனைவி சண்டையை வித்தியாசமான கதை சொல்லல் மூலம் படத்தில் காட்டியுள்ளார். அது நம்மோடு கனெக்ட் ஆனதா என்றால். . அதுதான் இல்லை. விஜய்சேதுபதியும் நித்யாமேனெனும் மாறி மாறி சண்டையிடும் போதெல்லாம் சீக்கிரம் பஞ்சாயத்தை முடிங்கப்பா என்றே தோன்றியது

விஜய்சேதுபதி இப்படத்தில் தானொரு பக்கா கமர்சியல் பேக்கேஜ் நடிகன் என்பதை நிரூபித்துள்ளார். மிகச்சிறப்பாக தன் பங்களிப்பைப் படத்தில் செய்துள்ளார். நித்யாமேனென் சொல்லவே வேண்டாம். மனிதி வழக்கம் போல சம்பவம் செய்கிறார். கோபம், கண்ணீர், காதல் என எல்லா உணர்வுகளிலும் நித்யா செம்மய்யா. யோகிபாபு, சரவணன், ஆர்.கே சுரேஷ், தீபா உள்ளிட்ட பிற நடிகர்களும் ஒகே

சுகுமார் தனது கேமராக் கண்களால் அழகழகான ப்ரேம்களை நம் கண்களுக்கு விருந்தளித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் தனது இசையால் படத்தை ஆங்காங்கே காப்பாற்றுகிறார்.

படத்தைக் காப்பாற்ற வேண்டிய பாண்டிராஜோ திரைக்கதையில் அநியாயத்திற்குச் சொதப்பியுள்ளார். வசனங்களிலும் நிறைய சிறுபிள்ளைத் தனம் தெரிந்தது. நன்றாக வந்திருக்க வேண்டிய படம். ஜஸ்ட் மிஸ் ஆகிவிட்டது. பேமிலி படம் எப்படியிருந்தாலும் பிடிக்கும் என்பவர்களுக்கு இந்தப்படம் வொர்க்கவுட் ஆகலாம்
2.75/5